நான் கடவுள்.... ஏன் கடவுள்???

முன்னுரை:

ஒரு வேண்டுகோள். தயவு செய்து படம் பார்க்கும் முன் இந்த comment ஐ படிக்க வேண்டாம்; நான் செய்த தவறை நீங்களும் செய்ய வேண்டாம். யாருடைய கருத்தையும் முன் வைத்து ரசிக்க வேண்டிய படமல்ல இது. ஒவ்வொருவரும் உணர்ந்து பார்க்கணும்.

பொருளுரை:

பாலாவை பத்தியோ இளையராஜாவை பத்தியோ விமர்சனம் சொல்ற அளவுக்கு என்னாலையும் போக முடியல. ஆனா ஒன்னு மட்டும் புரியுது, அவங்க ரெண்டு பெரும் தாங்கள் மேதைனு புரிய வைக்கிறதுக்காக கஷ்டபடல, அந்த படம் நம்ம ஆன்மா வரைக்கும் புரியணும்னுதான் கஷ்டபட்டுருகாங்க. அந்த கஷ்டத்துக்கு பலன் இருக்கன்னு கேட்டா 'கை மேல பலன் ' னுதான் சொல்லணும். சரி அப்டி என்னதாண்டா புரிஞ்சிகிட்டான்னு எல்லாரும் கேக்குறீங்க ...சொல்றேன்


1. first பாலா இந்த படத்தை சமியருங்களுக்காக எடுக்கல. ஆனா கடவுளை பத்தி நாம இன்னொரு முறை ஆழமா யோசிக்க வைக்கிறாரு.
2. இந்த உலகத்தில் நாம தினம் சந்திக்கிற மக்களோட வாழ்க்கைதான், ஆனா அவங்கள பத்தின நம்ம கவனமும் கண்ணோட்டமும் என்னனு நம்மளையே மறு பரிசீலனை பண்ண வச்சிருக்கார். அப்படிப்பட்ட மக்கள் எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சிகிட்டா மட்டும் போதும், மத்தபடி பரிதாபமெல்லாம் படவேண்டாம்னு நேனைச்சிருக்கார்.
3. பாலாவோட இந்த சிந்தனைகள் எல்லாம் நம்ம மூளைக்கு மட்டும் ஏறினா பத்தாது , ஆன்மாவையும் தொடணும் ... இததான் இளையராஜாவும் பண்ணி இருக்கார். அதுல அவருக்கு நிச்சயம் வெற்றிதான்.
4. எத்தனையோ வேதங்கள், மந்திரங்கள் கடவுளை பத்தி இத்தனை வருஷமா பேசினதை, ரொம்ப சாதரணமா பாலா கையாண்டு இருக்கர்னுதான் தோணுது. கடவுளை அதிகமா விமர்சிக்கிறது கூட நம்மளை சிந்திக்க வைக்கத்தான்.
5. இது எல்லா மதத்துக்கும் பொதுவான படம்தான் .பாலா இந்து மதத்தை தேர்வு பண்ணினது easy&effective a சொல்லத்தான்.
6. எல்லாரும் ஆர்யா இன்னும் நல்ல பண்ணி இருக்கலாம்னு சொல்றாங்க. ஆனா எல்லாரும் பார்கனும்கிறதுக்காக நிறைய scenes cut பண்ணிட்டனால ஆர்யாவோட அகோரமான நடிப்பும் சேந்துதான் cut ஆகி இருக்கும்னு நான் நெனைக்கிறேன். மத்தபடி ஆர்யாவோட charactor importance, பாலாவோட எல்லா படம் போல இதிலும் கடைசியாதான் தெரியுது. அது வரைக்கும் அவரோட actions எல்லாம் just demo தான்.
7. பூஜாவை பத்தி சொல்லனும்னா, இனிமே ரொம்ப பேரு பூஜாவை கவனிக்க ஆரம்பிப்பாங்க... award வரும்னெல்லாம் எனக்கு ஆருடம் சொல்ல தெரியாது... ஆனால் படம் பாத்து முடிஞ்சப்புறம் discuss பண்ணும்போதுதான் பூஜா கிற ஒரு நடிகை நடிசிருக்குறதே நெனப்பு வருது.
8. இது ஒரு கொடூரமான படம்னு யாரவது நெனச்சா pls அத மாத்திகோங்க. இளகுன மனசு உள்ளவங்க கட்டாயம் பாக்க வேண்டிய படம். அவங்கதான் உண்மைலேயே feel பண்ணி பாப்பாங்க. நான் ஒன்னும் ரொம்ப soft nature எல்லாம் இல்ல. ஆனா 'என்னடா இப்படி எல்லாம் இருக்கே ' ன்னு நான் feel பண்ணினேன். பெண்கள் நிச்சயமா பாக்கணும்.
9. நாமெல்லாம் ஏதோ நமக்குதான் ரொம்ப problems இருக்குறத நெனச்சிகிட்டு ரொம்ப சலிச்சிகிறோம். படத்தை பாத்தா தன்னம்பிக்கை வராது மட்டுமில்லாம, கடவுள் மேலயும் நம்ம parents மேலயும் ஒரு விதமான நன்றி உணர்ச்சி வரதை தவிர்க்கவே முடியாது
10.இந்த படத்தோட concept 'மரணம்கிறது ஒரு நிகழ்வு மட்டுமல்ல, உணர்வும் கூட'...அதை எப்படி உணர்கிறோம் என்பதுதான். அதாவது மரணகிறதை ஒரு உணர்ச்சியா வச்சி பார்த்தா, அது சந்தோஷமா சோகமாங்கிறது நமக்கு அமைந்த வாழ்க்கையை பொறுத்தது. பெரும்பாலனவுங்க அதன் சோகம்னு நெனச்சாலும், அத சந்தோஷம்னு நினைக்கிற அளவுக்கு கூட மக்கள் மோசமான வாழ்க்கை வாழ்றாங்கன்னு நமக்கு புரியும். சாவை வரம் அல்லது தண்டனையா பெற வேண்டியவர்களுக்கு வரம்/ தண்டனை கொடுக்கிறதின் முக்கியத்துவம் தான் 'நான் கடவுள்'. அதே ஏனோ தானோன்னு சொல்லாம அப்படிப்பட்ட இரண்டு வகை மனிதர்களிலும் ஒவ்வொரு பகுதியினரை தேர்ந்தெடுத்து ரொம்ப அழுத்தமா, கலப்படமா இல்லாம சொல்லி இருக்கார்.

இன்னும் நிறைய இருக்கு... ஆனா இப்போவே screenplay சொல்லிட்ட மாதிரி ஒரு குற்ற உணர்ச்சி வந்துடுச்சி. அதனால இதோட எல்லாத்தையும் நிறுத்திக்குறேன்.

முடிவுரை:
நான் படிச்ச சில விமர்சனங்களில் உள்ள குறைகளை படம் பார்த்ததும் நல்லா புரிஞ்சிகிட்டேன். இத படிக்கிற எல்லாரும் தயவு செய்து... படம் பாக்கும்போது இதெல்லாம் மறந்திட்டு open-minded a படம் பாருங்க. அபோதான் உங்க சொந்த கருத்தை உங்களாலேயே உணர முடியும்.