உலகப் பொதுமறை என்பது...

உலகப் பொதுமறை என்பது உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவான, அனைவரும் follow பண்ண கூடிய/பண்ண வேன்டிய மறைகள்( or வழிகள்) அதுல இருக்கு அவ்ளோதான்.. அதுக்காக எல்லாரும் அத follow பண்றாங்கன்னு நம்பினா அது நம்ம அறியாமை. கீதை, பைபிள் ,குர்-ஆன் எல்லாம் ஏதாவது ஒரு மதத்தின் ஆதரவோடதான் இவ்ளோ reach ஆச்சு. ஆனா நம் திருக்குறள் அந்த எல்லா ஒழுக்கத்தையும் சொன்னாலும் எந்த மதத்தையும் நம்பி இருக்கல, அதான் problem. நமக்கே govt. பஸ்ல எழுதி, school bookla சேர்த்து, bus ticketla கூட எழுதி, govt. officela எல்லாம் எழுதி வச்சனாலதான் இவ்வளவாவது தெரியுது. யாராவது திருக்குறள் பத்தி பேசினா "ஏன் இந்த ஆளு எப்போ பாத்தாலும் இதையே example காட்டுறார்?" னு கடுப்படிக்கிறோம் :(

இவங்க இவ்வளவு போராடி விளக்கம் சொன்னதே இவங்க தமிழ் மீடியம் ல படிச்சனாலதான் இருக்கும், மத்தவங்களுக்கு அது கூட தெரியாது. நாமே இன்னும் திருக்குறளோட அருமைய தெரிஞ்சிக்கல ..அப்புறம் மத்தவங்க எங்க இருந்து??

அந்த கன்னடர் பதில் சொன்னதே அவங்க ஊர்ல சிலை வச்சனாலதான்.. இல்லேன்னா 'சினிமாவுக்கு பாட்டு எழுதுறவரா இருக்கும்' னு கூட சொல்லி இருப்பாங்க..

என்னதால் நாம தமிழ் மொழி பத்தி பத்தி பத்தியா பேசினாலும், மக்கள் கிட்ட அப்படி ஒன்னும் மொழி மேல மதிப்பு இருக்க மாதிரி தெரியல. இத்தனை காலமும் நம்ம govt. மற்றும் அரசியல் கட்சிகள் தான் (காரணம் என்னவா இருந்தாலும்)கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் தமிழ காப்பாத்தி இருக்கே தவிர, மக்கள் அந்த அளவுக்கு பொறுப்பு எடுத்துகிட்ட மாதிரி தெரியல. மொழி பற்று, மொழி வெறி எல்லாம் தேவை இல்லை... நமக்கென்று இருக்கும் சில தனித்தன்மைகளை மதிக்கதெரிந்தாலே போதும்.

பின்குறிப்பு: மேற்கண்ட பத்தியில் 'தமிழ்' என்பதற்கு பதிலாக 'திருக்குறள்' என்று மாற்றிக்கொள்ளவும் :)

இந்த பதிவை என்னை எழுத தூண்டிய பிரியா அவர்களுக்கு மிக்க நன்றி...அவர் மற்றவர்களுக்கு விளக்கம் கொடுத்ததற்கும்!!!

இதை அவங்களுக்கு கொடுக்குற பதிலாகவோ or அவங்க சொன்னது தப்புன்னு சொல்லவோ எழுதல. அவர்களின் பதிவு என்னை எழுத தூண்டியதின் விளைவே......